பிரதான ஊடக வெளியீடுகளில் அடிக்கடி கருத்துகளை எழுதும் ஒரு சுதந்திர பத்திரிகையாளரான ரன்விஜய் சிங், தனது டுவிட்டர் பதிவில், ‘மதரசாக்கள் சாதாரண பள்ளிகளைத் தவிர வேறில்லை. மதரசாக்களில் வரலாறு, குடிமையியல், கணிதம், அறிவியல் மற்றும் உருது. ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. மதரசாவில் படிப்பதன் மூலம், குழந்தைகளும் ஐ.ஏ.எஸ் ஆகிறார்கள், எதிர்காலத்திலும் அவர்கள் உருவாக்கப்படுவார்கள். அரேபிய வார்த்தைகளைக் கண்டு புருவங்களை உயர்த்தாமல், கொஞ்சம் அவர்களைப் படிக்கவிடுங்கள்’ என பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனுங்கோ, ‘இது அவர்களின் மோசமான யதார்த்தம் இல்லாத மதரசாக்களை பெருமைப்படுத்துவதைத் தவிர வேறில்லை. மதரசாக்கள் என்ற பெயரில் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியைப் பறிப்பது அவர்களின் குழந்தை உரிமைகளை மீறுவதாகும். இது அரசியலமைப்பின் 21 ‘ஏ’ பிரிவை மீறுகிறது’ என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ரன்விஜய் சிங் , ‘என்.சி.பி.சி.ஆர் தலைவரின் இந்த அறிக்கையின்படி, அரசாங்கமே மதரஸாவை நடத்துவதால் அரசாங்கங்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்’ என்றார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கனுங்கோ, ‘அரசாங்கம் ஒரு தெளிவற்ற வரைமுறையில்லாத மதரசாக்களை நடத்தவில்லை’என்று தெளிவுபடுத்தியதுடன், ‘ஔரங்கசீப் உருவாக்கிய பாட திட்டத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய மதப் பள்ளிகளில் 1.25 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என்று கூறி மார்ச் 2021ல் என்.சி.பி.சி.ஆரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டினார். இது பாரதத்தில் சிறுபான்மை சமூகங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வியை ஆவணப்படுத்துகிறது.