தமிழகம் குறைக்குமா?

எரிபொருள் விலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2.41ம் மற்றும் டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36ம் குறைப்பதாக அறிவித்தது. அடுத்ததாக ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) லிட்டருக்கு 2.48 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.16 ரூபாயும் குறைத்துள்ளது. கேரளா மற்றும் ராஜஸ்தான் அரசுகளை பின்பற்றி மேலும் சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, எரிவாயு சிலிண்டர் மீது ரூ. 100 குறைப்பு என கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் தனது வாக்குறுதியை முழுமையாகவே நிறைவேற்றாத தி.மு.க அரசு, இப்போதாவது தனது வாக்குறுதியை நிறைவேற்றுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.