அனுமதி பெறாத ஒலிபெருக்கிகள்

நாட்டில் ஒலிபெருக்கிகளில் அதிக சத்தம் எழுப்பி அதன் மூலம் ஒலி மாசு ஏற்படுத்துவதை தடை செய்து உச்ச நீதிமன்டம் ஏற்கனவே ஆண்டு தடை விதித்தது. ஆனால் பல இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை குறிப்பாக மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை சத்தமாக வைத்து தொழுகை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கோயில்கள், மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது, பக்தி பாடல்களை ஒலிபரப்புவது போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், 15 நாட்களுக்குள் இதை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக அரசின் தலைமை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோர், பொதுக்கூட்டங்களை நடத்துவோர் 15 நாட்களுக்குள் உரிய முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாதவர்களின் ஒலிப்பெருக்கிகளை தாமாகவே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட துறையினர் அதனை அகற்றுவார்கள். முடிய அரங்குகளைத் தவிர மற்ற இடங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தத் தடை, ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து பல்வேறு நிலைகளில் குழுக்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.