ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரான அசாதுதீன் ஒவைசி மத்திய அரசை மிரட்டும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 20 கோடி மக்களில் ஒரு சிறு பகுதியினர் பயங்கரவாதிகளாக ஆக்கப்பட்டால், அவர்கள் பழிவாங்கும் வன்முறையில் ஈடுபட்டால், மத்திய அரசால் பாதுகாப்பு சவாலை சமாளிக்க முடியுமா? அரசு நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க இன்னும் ஜனநாயக சுதந்திரங்கள் அதிகமாகதியாகம் செய்யப்பட வேண்டுமா? என கேட்டுள்ளார். அசாதுதீன் ஓவைசி தனது டுவீட்டில் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துள்ளார். என்றபோதிலும், அவர் மேற்கோள் காட்டும் எண்கள், முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அவரது அரசியல் போன்றவற்றில் இருந்து அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. முன்னதாக இவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி, 2012ல் 100 கோடி ஹிந்துக்களை அழித்தொழிக்க, ராணுவத்தை 15 நிமிடம் செயல்படாமல் வைத்திருந்தால் போதும் என்று பேசியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.