தேசத்தின் பல இடங்களில் ஸ்ரீராம நவமி ஊர்வலங்கள், அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களின்போது, பிரிவினைவாதிகளின் சூழ்ச்சியால் சில முஸ்லிம்கள் கற்களை எறிந்து கலவரம் செய்தனர். அவர்களுக்கு மத்தியில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில், முஸ்லிம்கள் பலர் பூக்களைத்தூவி ஊர்வலத்தை வரவேற்றனர். ஜுபர் கான் என்பவர், “ஹனுமன் ஜெயந்தியின் போது எங்கள் ஹிந்து சகோதரர்களை வரவேற்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். போபால் அதன் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்கு பெயர் பெற்றது. அதை சீர்குலைக்க யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார். ஊர்வலத்தை வரவேற்ற சஜித் கான், “இது கங்கா-யமுனை கலாச்சாரம், போபாலில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள். போபாலின் உண்மையான கலாச்சாரத்தைக் காட்டவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்றார்.