மகாராஷ்டிர மாநிலம் சங்கம்னேரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நடத்தப்பட்ட்து. அப்போது, சுமார் 120 முஸ்லிம்கள் அடங்கிய கும்பல் திட்டமிட்ட வகையில் அங்கு ஒன்று திரண்டு “அல்லாஹு அக்பர்”, “இஸ்லாம் ஜிந்தாபாத்” போன்ற ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது பல பெண்களும் முஸ்லிம் கலவரக்காரர்களால் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமாக வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், பிறை மற்றும் நட்சத்திரங்களின் சின்னங்களைக் கொண்ட கொடிகளை ஏந்தியபடி முஸ்லிம் இளைஞர்களின் கூட்டம் “அல்லாஹு அக்பர்” மற்றும் “இஸ்லாம் ஜிந்தாபாத்” என்ற கோஷங்களை எழுப்பியபடி சாலை வழியாக அணிவகுத்துச் செல்வதைக் காண முடிந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் கலவரம், தாக்குதல் மற்றும் பெண்களைத் துன்புறுத்த முயற்சி செய்ததற்காக சுமார் 120 வன்முறையாளர்கள் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.