ஜே.என்.யுவின் இடதுசாரிகள் ஆதிக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பேராசிரியை சாந்திஸ்ரீ துளிப்புடி. இவர், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் அமைப்பான அகில பாரதிய ராஷ்டிரிய சைக்ஷிக் மகாசங்கின் கேரளப் பிரிவான உன்னத வித்யாபயாச அத்யபாக சங்கத்தின் வெள்ளி விழா மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஜே.என்.யுவில்  முன்பு பணிபுரிந்த 40 சதவீத ஆசிரியர்களின் மனைவிகள் ரஷ்ய உளவாளிகளாக இருந்தனர். ஜே.என்.யு, இடதுசாரி சக்திகளின் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி முறைகளையும் ஆசிரியர் நியமனங்களையும் பின்பற்றி வருகிறது. இப்போது, ​​ஜே.என்.யு புதிய மாற்றங்களை நோக்கி செல்கிறது. இதுவரை, நமது கல்வி முறை மற்றவர்களை கண்மூடித்தனமாக வஞ்சித்து வந்தது. புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் பெண் ஆசிரியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தேசிய நலன்களில் அக்கறை கொண்டவர்களைத் தனிமைப்படுத்துவதும் அவர்கள் குறித்து அவதூறு பரப்புவதும் இடதுசாரி சக்திகளின் பொதுவான குணம். அவர்கள் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். அதனை ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரல் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நமது கலாச்சாரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான முக்கியத்துவத்தையும்  உரிமைகளையும் அளிக்கிறது. நமது தேச நலன்களைக் காக்க அதிகமான பெண்கள் முன்வர வேண்டும்’ என கூறினார்.