பள்ளி கல்வித் துறை லட்சணம்

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, ஆறாம் வகுப்பு, மூன்றாம் பருவத்துக்கான கணிதப் புத்தகத்தில் முழு எண்கள் பாடம் ஒன்று உள்ளது. அதில், முழு எண்கள் பற்றி மாணவர்களுக்கு விலக்குவதற்காக சீட்டுக் கட்டு படத்தை போட்டு அதனை விளையாடும் வகையில் பாடம் விளக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீட்டு விளையாடுவது தவறு எனும்போது, அதே சூதாட்டத்தை வைத்து பாடம் சொல்லி கொடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதே பாடத்தை விளக்க மற்ற மாநிலங்களில் நல்ல பல உதாரணங்கள் சொல்லியுள்ள நிலையில், தி.மு.க அரசுக்கு வேறு உதாரணங்களே கிடைக்கவில்லையா? என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய திண்டுக்கல் ஐ. லியோனியைதான் தமிழக அரசு தற்போது நியமித்துள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. மதுவும் சூதாட்டமும் வாழ்க்கையை பாழாக்கும், அது தவறு என எடுத்துரைக்க வேண்டிய மாநில அரசே, இலக்கு வைத்து டாஸ்மாக்கை வளர்ப்பது, சிறார்கள் மனதில் சீட்டுக்கட்டு வழியாக சூதாட்டத்தை புகுத்துவது என தனது திராவிட மாடல் ஆட்சியின் பெருமையை பறைசாற்றி வருகிறது. இதேபோல, நான்காம் வகுப்பு பாடத்தில் நிலங்களை வகைப்படுத்துவதில், ஐவகை நிலங்கள் என்பதற்கு பதிலாக, நான்கு வகை நிலங்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதுபோன்ற செயல்பாடுகள் பாடநூல் தயாரிக்கும் குழுவினரின் திறமை மீது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.