தி.மு.கவின் அடுத்த ஸ்டிக்கர்

சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் 16 வயதேயான பாரதத்தின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. அவரை உலகமே வியந்து பாராட்டி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள திராவிட ஸ்டாக்குகளிடம் இருந்து அதற்கான பெரிய பாராட்டு, அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் அச்சிறுவனை டுவிட்டரில் பாராடியதோடு நிறுத்திவிட்டார். அதே சமயம், சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் அப்துல் கலாம் என்ற சிறுவன், இணையதள டி,வியில் மனிதநேயம் குறித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சிறுவனை பாராட்டிய ஸ்டாலின், அவர்களுக்கு தமிழக நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஒரு வீட்டை வழங்கினார். இந்நிலையில் அந்த வீடு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம், அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட வீடு என தெரிய வந்துள்ளது. இது, மத்திய அரசு திட்டங்களில் தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளும் தி.மு.க அரசின் வழக்கமான செயல்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, சிறுவன் பேசிய அந்த ‘மனித நேயம்’ என்ற தலைப்பை பற்றி உண்மையிலேயே ஆழமான புரிதல் அவனுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. இது, அவனது பெற்றோரோ அல்லது மற்றவர்களோ தயாரித்து அளித்தது என நன்றாகவே வீடியோவில் தெரிகிறது. இருந்தாலும், அவனை பாராட்டி முதல்வர் வீடு பரிசளித்துள்ளார். ஆனால், பிரக்ஞானந்தாவை டுவிட்டரில் வாழ்த்தியதோடு நிறுத்திவிட்டார் என்றால் அதற்கு ஒரே ஒரே காரணம் தான் இருக்கும். அது அனைவருக்கும் தெரியும்.