வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார் என்று கூவுகிற கூட்டம் ஒன்று உண்டு.
ராகுல் காந்தி பேசும் போது சாவர்க்கர் வெள்ளைக்காரன் சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு விடுதலை பெற்றார் என்று ஆபாசமாக மூன்றாந்தர நடிகனே வெட்கப்படும்படி நடித்துக் காட்டுவா’ர்’.
உண்மை என்ன?
வீர விநாயக தாமோதர சாவர்க்கர் 1910 இல் கைது செய்யப்பட்டார். இரட்டை ஆயுள் தண்டனை. 1960 வரை சிறைவாசம் என்பது தீர்ப்பு.
சாவர்க்கர் மன்னிப்பு கோரியதாக இவர்களால் மிகவும் விரிவாக காட்டப்படும் மனு 1914 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. உண்மையில் இந்த நான்கு ஆண்டுகளில் சாவர்க்கர் அனுபவித்த சித்திரவதை என்பது உச்சகட்டமாக இருந்தது. மிக மோசமான சித்திரவதை. பாரிஸ்டர் படித்த 27 வயதேயான இளைஞன் இப்படிப்பட்ட சித்திரவதையில் அடுத்த ஐம்பது ஆண்டுகளைக் கழிக்க வேண்டுமென்பதே ஒரு மனிதனை நொறுக்கிவிடும்.
தனிமை சிறை, நாட்கணக்கில் விலங்குகளிடப்படும் தண்டனை, கைகள் கால்கள் மடக்காமல் இருக்கும்படியான இரும்பு கம்பிகள் கொண்ட விலங்குகள், செக்கிழுத்தல், என்பது போன்ற தண்டனைகள்.
இப்படிப்பட்ட நிலை எந்த மனிதனும் அசைத்து விடும்.
எனவே சாவர்க்கர் கருணை மனு எழுதினாரென்பது ஆச்சரியமில்லை. ஆனால் எது ஆச்சரியம் என்றால் இந்த மனுவில் இருக்கும் கடைசி வரிகள்தாம்.
’இத்தனையையும் நான் சொல்வது என்னுடைய விடுதலைக்கென்று கருதுவீர்களென்றால் என்னை மட்டும் சிறையிலேயே வைத்துக் கொண்டு பிற கைதிகளை விடுவியுங்கள்.’
நான்கு ஆண்டுகள் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர், தன் விடுதலை 1960 இல் என்றால் ஏறக்குறைய வாழ்க்கையையே நரகத்தில்தான் கழிக்க வேண்டுமென்கிற மரணத்தைக் காட்டிலும் பயங்கரமான எதிர்கால இருளை நோக்கியிருக்கும் ஒரு மனிதனுக்கு இந்த வரிகளை எழுத – இந்த வரிகளை எழுதுவதாலேயே இந்த மனு நிராகரிக்கப்படும் சாத்தியம் உண்டு என அறிந்தும் கூட இந்த வரிகளை எழுத – எத்தனை அசாத்திய அதிமானுட மன திடமும் தம் தேசத்தின் பிற தேசபக்தர்களிடம் இதயப்பூர்வமான அன்பும் வேண்டும்!
இப்படிப்பட்ட வரிகளை எழுதிய ஒருவரை மன்னிப்பு கடிதம் எழுதினான் என்று ஒருவன் சொன்னால் அவன் எப்படிப்பட்ட அயோக்கியனாகவும் மனித இனத்திலேயே கடைக்கெட்ட பிறவியாகவும் இருக்க வேண்டும்!
- எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பேஸ்புக் பதிவு.