பாரத அரசு, செமிகண்டக்டர் துறைக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை என்ற ஒரு மெகா திட்டத்தை அறிவித்தது. 76,000 கோடி மதிப்பிலான இந்த செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதற்கு இதுவரை சுமார் எட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அறிவித்த குறுகிய காலத்திற்குள் கிடைத்த இந்த பதிலில் அரசு மகிழ்ச்சி அடைகிறது. இந்த விண்ணப்பங்களின் மீதான விரிவான மதிப்பீட்டை அரசு மேற்கொள்ளும். முழு செயல்முறைகளையும் முடித்து அடுத்த எட்டு மாதங்களில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்கள் பாரதத்தின் இந்த அறிவிப்பை தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. அமைச்சகம் பல நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகிறது. இட்ய்ஹனால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.