மிண்ட் எமர்ஜிங் மார்க்கெட் டிராக்கர் வெளியிட்டுள்ள உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகள் பட்டியலில் பாரதம் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தோனேசியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எனினும் அதன் நாணயம் பின்தங்கி இருப்பதால் அது இப்பட்டியலில் பாரதத்தைவிட சற்று தொலைதூரத்தில் உள்ளது. 3ம் இட்த்தில் பிரேசில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சிக்கல்கள், அதீத கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார தேக்கம் போன்றவற்றால் அது 7ம் இடத்தில் பின்தங்கியுள்ளது. அமெரிக்க நிதி நெருக்கடி, ரஷ்ய உக்ரைன் நெருக்கடி, அதிகரித்து வரும் வட்டி விகித உயர்வுகள், மெதுவான பொருளாதார வளர்ச்சி, உயர் பணவீக்கம் போன்றவற்றால் மற்ற நாடுகள் இப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.