கர்நாடகாவை சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அதன் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ, கர்நாடகா ஃபோரம் ஃபார் டிக்னிட்டி (கே.எப்.டி) போன்ற தீவிர இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யாததற்காக தனது சொந்தக் கட்சியை சாடினார். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் கட்சித் தொண்டர்கள், ஹிந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதற்கு வருத்தம் தெரிவித்தார். பா.ஜ.க அரசு சுய சுயபரிசோதனை செய்வதற்கு பதிலாக முந்தைய காங்கிரஸ் அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அப்படியெனில், தொண்டர்கள் ஏன் பா.ஜ.க ஆட்சியில் அமர வேண்டும் என பாடுபட்டார்கள்? அவர்கள் நமக்காக சுவரொட்டிகளை ஒட்டி னார்கள், பிரச்சாரங்களை நடத்தினார்கள். இன்று ஹிஜாப் பிரச்சினையால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய பின்னரும் இது நடந்துள்ளது. நீங்கள் அமைதிக்காக முறையிடுகிறீர்கள், ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நீங்கள் பிரிவு 144 விதிக்கிறீர்கள் ஆனால் அவர்கள் வெளிப்படையாக அதை மீறுகிறார்கள். இதற்கு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஹர்ஷாவின் கொலைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறீர்கள். நமது தொண்டர்கள் நம்மை நம்புவார்களா? அதனால் நான் வெட்கப்படுகிறேன். டி.ஜே ஹள்ளி, கே.ஜே ஹள்ளி சம்பவத்திற்குப் பிறகு இந்த பயங்கரவாத அமைப்பினர் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்குமா? கர்நாடகாவில் எஸ்.டி.பி.ஐ கேரளா பாணி கொலைகளை நிகழ்த்துகிறது. சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்’ என பேசினார்.