விவசாயிகளுக்கு வஞ்சனை

முல்லைப் பெரியாறு அணையின் உரிமை, அணை இருக்கும் பகுதி அனைத்தும் தமிழக அரசிடம்தான் இன்று வரை உல்ளது. கேரள அரசு அணையில் இருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசின் அனுமதியை பெற்றாக வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்தாண்டு தமிழகத்தை கேட்காமல் அணையில் இருந்து தண்ணீரை கேரள அதிகாரிகள் திறந்து விட்டனர். இதற்கு அமைச்சர் துரைமுருகன், உச்ச நீதிமன்ற ஆணைப்படிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்டபோது கேரள அமைச்சர்கள் அங்கு தற்செயலாக வந்திருந்தனர் என்று முட்டுக்கொடுத்தார். இதன் மூலம், கேரள அரசிடம் தமிழக உரிமைகளை இழந்ததோடு, தமிழக மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது ஸ்டாலினின் தி.மு.க அரசு. இதனை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. இந்நிலையில், கேரள சட்டசபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும். முல்லை பெரியாறு அணையில் 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்த்தப்படாது என்று தெரிவித்திருக்கிறார். தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து தி.மு.க, அவர்களின் கூட்டணிக் கட்சியினர், அவர்களுக்கு ஆதரவான விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், இடதுசாரிகள் என யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை.