காங்கிரசின் சர்ச்சை கருத்து

கல்வி வளாகத்திற்குள் மத உடைகளை அணியக்கூடாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முஸ்லிம் மாணவிகள் அங்கு ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தில் சேடம் பகுதியைச் சேர்ந்த காங்கிரசின் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் முகரம் கான், ஹிஜாப் போராட்டங்களுக்கு ஆதரவாக அவர் அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர்கள் காவி உடை அணிந்து, எங்கள் குழந்தைகளை ஹிஜாபைக் கழற்றச் சொல்கிறார்கள்.  ஹிஜாப் அணிவதைத் தடுப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள் என கூறியுள்ளார். கானின் இந்த கருத்துக்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேடம் காவல் நிலையம் முன்பு ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகரம் கான் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முகரம் கான் மீது மாவட்ட வி.ஹெச்.பி அமைப்புச் செயலாளர் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.