தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலினை தென்னிந்திய திருச்சபை பாதிரிகள் நேரில் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு தி.மு.கதான். அவர்களின் வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தனர். இவர்களின் இந்த வாக்குமூலம் தி.மு.கவின் செயல்பாட்டையும் அதன் தலைவர்களின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. ஜார்ஜ் பொன்னையாவின் கருத்தை நிரூபிக்கிறது. தேர்தலில் மதத்தை கலக்கக்கூடாது, மத ரீதியான பிரச்சாரம் தவறு என கூறுகிறது தேர்தல் ஆணையம். ஆனால், இங்கு அதனை ஆளும் கட்சியும் கிறிஸ்தவ அமைப்புகளும் அப்பட்டமாக, வெளிப்படையாக மீறியுள்ளனர். ஆனால், கேட்பாரில்லை. இதனை மக்கள் உணர்ந்தால் நன்மை பிறக்கும்.