மாணவிகள் வீண் பிடிவாதம்

கர்நாடக  உயர் நீதிமன்றம், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மத உடைகளை அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சில முஸ்லிம் மணவிகள் நடந்துகொண்டுள்ளனர். கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதின்மூன்று மாணவிகள் 10ம் வகுப்பு ஆயத்தத் தேர்வுக்கு ஹிஜாபுடன் வந்தனர். ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டும் அவர்கள் ஹிஜாபை அவர்கள் அகற்ற மறுத்தனர். இதனால், ஹிஜாபைக் கழற்றிவிட்டு மாணவிகள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ஹிஜாபைக் கழற்றமாட்டோம் என்று கூறி மாணவிகள் வெளியேறினர். மேலும், நாங்கள் தேர்வு எழுதாவிட்டாலும் பரவாயில்லை. பரீட்சை முக்கியமில்லை, மதம்தான் முக்கியம். ஹிஜாப் கட்டாயமாக்காவிட்டால் பள்ளிக்கு வரமாட்டோம். ஹிஜாபைக் கழற்றச் சொன்னால், வீட்டிற்குத் திரும்பி வரும்படி பெற்றோர் கூறினர் என சொல்லி வெளியேறினர்.