மீண்டும் துவங்கும் சர்ச்சை

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் அங்கு படிக்கும் மாணவிகள் சிலர், வேண்டுமென்றே ஹிஜாப் பிரச்சனையை துவக்கினர். இதன் பின்னணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள் உள்ளது வெளிச்சத்துக்கு வந்தது. அதற்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தூபம் போட்டு வருகின்றன. முஸ்லிம்கள் இவ்விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் எந்த வித மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளையும் அணிந்து வரக்கூடாது. பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், உடுப்பி அரசு பள்ளியில் முஸ்லிம் மாணவிகள் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் புர்கா அணிந்து வகுப்புகளுக்கு சென்றுள்ளனர். இதனால், மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.