பா.ஜ.க அலுவலகத்தில் குண்டு வீச்சு

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள தமிழக பா.ஜ.க’வின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பிப்ரவரி 9ம் தேதி நள்ளிரவில் சில மர்ம நபர்கள் இந்த குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு, கமலாயம் முன்புறத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக நள்ளிரவு நேரம் என்பதால் ஆட்கள் இல்லை, அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால், பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில் இச்சம்பவம் பகலில் நடைபெற்றிருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்பது நிதர்சனம். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், நந்தனத்தைச் சேர்ந்த கர்த்தா வினோத் என்பவரை கைது செய்தது. விசாரனையில் அவர், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்ததால் குண்டு வீசியதாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், லாவண்யா மதமாற்ற பிரச்சனை, பா.ஜ.க வெளிப்படுத்திவரும் தி.மு.க ஊழல்கள், நீட் மசோதா, ஹிஜாப் பிரச்சனை போன்றவைகளுக்கு மத்தியில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.