மன்னிப்பு கேட்ட போப்

ஜனவரி 20 அன்று வெளியிடப்பட்ட மியூனிக் விசாரணை அறிக்கையில், போப் பதினாறாம் பெனடிக்ட், கிறிஸ்தவ சர்ச்சுகளில் நடைபெற்ற குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் பற்றி முன்னரே அறிந்திருந்தார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து வேறுவழியின்றி பாதிக்கப்பட்டவர்களிடம் போப் மன்னிப்பு கேட்டார். எனினும் தவறிழைத்தவர்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போப் 16ம் பெனடிக்ட், மியூனிக் பேராயராக இருந்தபோது குறைந்தபட்சம் நான்கு சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். எனினும் அதைத் தடுக்க அவர் முயற்சிக்கவில்லை. அந்த பாதிரிகள் தொடர்ந்து பணி செய்ய அனுமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2013ல் பதவி விலகிய போப் 16ம் பெனடிக்ட் மீதான குற்றச்சாட்டுகள், 1977 முதல் 82ம் ஆண்டு முனிச் மற்றும் ஃப்ரீசிங் பேராயராக இருந்த காலகட்டம். அவர் அப்போது கார்டினல் ஜோசப் ராட்சிங்கர் என்று அழைக்கப்பட்டார்.