கார்த்தில் சிதம்பரம் தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”தமிழகத்தில் நீட் தேர்வை ஆதரிப்போர் தமிழின துரோகிகள், நீட் தேர்வை எதிர்ப்போர் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. ‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்குக் கேட்டு போராடுகின்றனர்.நான், நீட் தேர்வை ஆதரிக்கிறேன்.நீட் தேர்வை புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அணுக வேண்டுமே தவிர, உணர்வு ரீதியில் அணுகக் கூடாது.நீட் தேர்வுக்கு முன்பு நீட் தேர்வுக்கு பின்பு என மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றிப் பார்க்க வேண்டும்.நீட் தேர்வுக்கு பின், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைத்து வருகிறது.நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை.தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தனர்.அதன்பின் நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளும் அதிகம் இருந்தன.இதனாலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகம் ஆனது” என்று கூறினார்.