பஹ்ரைனில் கோயிலுக்கு நிலம்

பஹ்ரைன் நாட்டு அரசு, அங்கு சுவாமிநாராயண் கோயில் கட்ட சமீபத்தில் நிலம் ஒதுக்கியது. பாரதமும் பஹ்ரைனும் தூதரக உறவுகளை நிறுவியதன் பொன்விழாவைக் கொண்டாடுகின்றன. இதனையொட்டி கடந்த பிப்ரவரி 1ல், பிரதமர் நரேந்திர மோடி பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது கொரோனா தொற்றின்போது பஹ்ரைனில் உள்ள பாரத சமூகத்தினரை அந்நாட்டு அரசு சிறப்பாக கவனித்துக் கொண்டதற்கும், சுவாமிநாராயண் கோயில் கட்ட நிலம் ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களும், அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். மேலும், பிரதமர் மோடி மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இளவரசர் சல்மானுக்கு பாரதம் வருகை தர அழைப்பை விடுத்தார். முன்னதாக, 2019ல் பிரதமர் மோடியின் வளைகுடா நடுகள் பயணத்தின் போது பஹ்ரைன் தலைநகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரூ. 33 கோடி செலவில் மறுசீரமைப்புத் திட்டம், அதற்கான கட்டடங்கள் கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.