சேவாபாரதியின் மருத்துவ சேவை

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக மூன்றாவது இலவச நடமாடும் மருத்துவ ஊர்தி தற்போது சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட ஆரம்பித்துள்ளது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடசென்னை பகுதியில் வந்து செல்லும் லாரி ஓட்டுனர்களுக்காக இந்த நடமாடும் இலவச மருத்துவ முகாம் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை முகாம் துவக்க நிகழ்ச்சி மாதவரம் (சி.எம்.டி.ஏ டிரக் டெர்மினல்) பகுதியில் துவங்கியது.