முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விடுவதாக சித்தரித்து வெளியான புல்லி பாய் செயலி சம்பந்தமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. செயலியை முடக்கியதுடன், சந்தேகத்தின் பேரில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புல்லி பாய் விவகாரத்தில் வகுப்புவாத சாயம் திட்டமிட்டே பூசப்பட்டு வருகிறது. தேசபக்தி மக்கள் முன்னணி அஸ்ஸாம் (பி.பி.எப்.ஏ) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரத்தில் வகுப்புவாத சாயம் பூசப்படுவது வேதனை அளிக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஹிந்து தேசியவாதிகளின் தூண்டுதலால் செயல்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணைத் தேவை. முழுமையான உண்மை வெளிவர வேண்டும். குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். யாரும் அவசரப்பட்டு இதற்கு மதசாயம் பூச வேண்டாம். இந்த செயலியில் தேசவிரோத சக்திகளின் ஈடுபாடு உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளது.