புல்லி பாய் செயலி முடக்கம்

முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ‘சுல்லி’ என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. ‘சுல்லி டீல்ஸ்’முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் வகையில் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற சமூக வலைதளம் பயன்பாட்டில் இருந்தது. பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அதை, மத்திய அரசு கடந்தாண்டு முடக்கி வைத்தது. இந்நிலையில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் ‘புல்லி பாய்’ என்ற செயலி ஒன்று பயன்பாட்டில் இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் புகார் அளித்தனர். டில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் இஸ்மத் ஆரா, சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார். இதனையடுத்து இணையதளத்தில் செயலிகளை பதிவு செய்யும் ‘கிட்ஹப்’ தொகுப்புக்கு தகவல் தெரிவித்து ‘புல்லி பாய்’ சமூக வலைதளம் உடனடியாக முடக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி, டில்லி காவல்துறை மற்றும் ‘ஐசெர்ட்’ எனப்படும் கம்ப்யூட்டர் அவசரகால உதவி அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.