பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மேம்படுத்தப்பட்ட புதிய கார் ஒன்று சமீபத்தில் வாங்கப்பட்டது. அவ்வளவுதான், ஏற்கனவே, கோடிக்கணக்கில் விலை உயர்ந்த ஆடைகளை அணிகிறார், கோடிக்கணக்கில் மதிப்புமிக்க காளான் உண்கிறார் என நித்தமும் பொய்பேசி திரியும் எதிர்கட்சிகளுக்கும் அவர்களின் சார்பு ஊடகங்களுக்கும் கேட்கவா வேண்டும்? வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல, இக்காரின் விலை 12 கோடி, இவ்வளவு செலவு தேவையா, என பேச ஆரம்பித்துவிட்டனர். ஆனால், உண்மையில் அந்த காரின் விலை 12 கோடி அல்ல, அதைவிட 3 மடங்கு குறைவானதுதான். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமரின் கார் மாற்றப்பட வேண்டும் என்பது பாதுகாப்புப் படையின் நியதி. ஆனால், பிரதமர் பழைய வகனத்தை 8 ஆண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளார். ‘பாதுகாக்கப்பட வேண்டியவரின் உயிர் சமரசம் செய்யப்பட்டுள்ளது’ என தணிக்கைத்துறை கண்டித்த பிறகு வேறு வழியின்றி புதிய கார் மாற்றப்பட்டுள்ளது. அதுவும்கூட, பிரதமருக்குத் தெரிவிக்காமலேயே அவரது அனுமதியின்றியே சிறப்பு பாதுகாப்புப்படை (ஏஸ்.பி.ஜி) முடிவெடுத்து வாங்கியுள்ளது. ஆனால், இதப்பற்றி எல்லாம் எதிர்கட்சிகளுக்கு என்ன கவலை? அவர்கள் இனிமேலும் அப்படித்தான் பேசித் திரிவார்கள்.