தொழிற்துறையில் ரௌடிகளின் அட்டகாசம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற் பூங்காக்களில் சுமார் 1,200 தொழிற்சாலைகள் உள்ளன. சென்னை துறைமுகம், விமான நிலையம், எண்ணுார் துறைமுகம் ஆகியவற்றில் நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன. தி.மு.க அரசு பதவி ஏற்றதில் இருந்து, இங்குள்ள தொழிற்சாலைகளிடம் மாமூல், பணியாளர் நியமனம், டெண்டர், கான்ட்ராக்ட் என கேட்டு அவர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்க ஆரம்பித்துள்ளனர் ரௌடிகள். அமைச்சர்களின் பெயரை பகிரங்கமாக சொல்லியே இவர்கள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை அனுசரித்து போகாத நிறுவனங்களுக்கு மிரட்டல், வாகனங்களை தடுப்பது, தொழிலாளர்களை துாண்டிவிடுவது, விதிமீறல் புகார்கள், அரசு நிர்வாகத்தின் மூலம் தொல்லை என பல்வேறு பிரச்சனைகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் நடந்த ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை விவகாரத்திலும் இவர்களின் கைவரிசை உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை வேறு மாவட்டங்கள், வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடலாமா என ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தி.மு.கழகத்தில் லஞ்சம் மலிந்துவிட்டது, அன்னக்காவடிகள் லட்சாதிபதி ஆகிவிட்டனர் என 1964ல் ஈ.வே.ராமசாமி கூறியது ஏனோ நினைவுக்கு வருகிறது.