கோயில் அருகே மீன் சந்தை

சென்னை குயப்பேட்டை அருகே உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆதிமொட்டையம்மன் கோவில் அருகே மீன் சந்தை அமைக்கும் பணிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி வெளியிட்டுள்ள நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலின் அருகே இயங்கிவந்த பழைய சந்தை கட்டிடத்தை இடித்துவிட்டு புதியதாக ரூ. 1.55 கோடி செலவில் மீன் சந்தை அமைப்பதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், இந்த மீன் சந்தையை கட்டுவதற்கான தொகையை கடனாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில், திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோயில்கள் மூலம் பெற இருப்பதும் தெரிய வந்துள்ளது. கோயிலின் வருவாயை கோயில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்ற ஆணை உள்ள நிலையில் ஒரு கோயிலின் வருவாயை பெற்று மற்றொரு கோயில் அருகே அக்கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வண்ணம் மீன் சந்தை அமைக்கும் பணிக்கு செலவிடுவது அறநிலையத்துறையின் அறங்கெட்ட செயல் என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.