நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் அபுஜ்மத் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள், சமூகப் பணி என்ற போர்வையில் தங்கள் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளால் அப்பட்டமாக மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களைத் தடுக்கக் கோரி ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அபுஜ்மத்தில் உள்ள 10 கிராம பஞ்சாயத்துகளில் இந்த இயக்கம் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டத்தில் தங்களின் பூர்வீக கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மத பழக்கவழக்கங்களை காப்பாற்றுவதே இயக்கத்தின் முக்கிய நோக்கம். சதிகாரர்களை விட்டுவிட மாட்டோம். மதமாற்ற சம்பவங்களால் அப்பகுதிகளில் பகுதியில் மோதல்கள் அதிகரித்து வருகிறது. மதம் மாறிய பழங்குடியினர் சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டின் பலன்களை தொடர்ந்து பெற்று வருகின்றனர். இதனை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், தங்கள் பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் இத்தகைய மதமாற்ற முயற்சிகளைத் தடுப்பதில் மாநில அரசு நிர்வாகம், காவல்துறையின் செயலற்று போய்விட்டன. இதனால்தான் இயற்கையை நேசிக்கும் ஏழைகளான நாங்கள் தெருவில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது என கூறிய அவர்கள், மதமாற்றத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என, உள்ளாட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.