இந்திய தொழில் கூட்டமைப்பின் கூட்டணி உச்சிமாநாடு 2021ல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் உற்பத்தியில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சி மூலம் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000க்கு கீழே வந்துள்ளது. 2019 முதல் காலாண்டில் பாரத ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை ஆறு சதவிகிதம் சரிவை சந்தித்திருந்தபோதும் பாரதத்தின் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000க்கு கீழே வந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது’ என தெரிவித்தார்.