போலி ரேஷன் அட்டைகள் ரத்து

பொது விநியோக முறை சீர்திருத்த நடவடைக்கைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் 2014 முதல் 2021 வரையிலான கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 4.28 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அட்டைகளில் குடும்பங்கள் அல்லது பயனாளிகளைச் சேர்ப்பது மற்றும் விலக்குவது ஆகிய செயல்பாட்டுப் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளே பொறுப்பு என மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.