நடவடிக்கை எடுக்கப்படுமா?

நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரியாம்பட்டியை சேர்ந்த தி.மு.க நிர்வாகி ரமேஷ் என்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மாரிதாஸ் மீது வேகவேகமாக நடவடிக்கை எடுத்த காவல்துறை இவர் மீது நடவடிக்கை எடுக்குமா? இனி, இவர் மேல் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, குண்டாஸ் சட்டம் பாயுமா என்பதை எல்லாம் பொறுத்துத் தான் காவல்துறை உண்மையிலேயே டி.ஜி.பி கையில் உள்ளதா அல்லது தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கையில் உள்ளதா என்பது மக்களுக்குத் தெரியும். தமிழகத்தில் தொடர்ந்து தேசத்தலைவர்களை அவமானப்படுத்தி வரும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சி.ஆர்.பி சட்டத்தில் வெளிமாநில காவல்துறையினர் மூலமாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் மக்கள் பரவலாக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.