‘ஒரே பாரதம் – உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்த ‘பாஷா சங்கம்’ என்ற செல்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் செயல்படும். இதில் அன்றாட உரையாடலுக்கு பயன்படும் நூற்றுக்கும் அதிகமான வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த செயலியில் 22 பாரத மொழிகளில் உரையாடல் தொடர்கள் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வசிப்போர் பல்வேறு மொழிகளை இதன்மூலம் கற்றுக்கொள்ள முடியும். அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து பழக முடியும். அலைபேசி வைத்திருப்போர் தங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் தாங்களாகவே தேர்வை நடத்தி இணைய தள சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்’ என மாநிலங்களவையில் கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.