முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அவர் தனது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டபோது, அதற்கு பழிவாங்க சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்த்தப்பட்டது. இந்த வன்முறை கலவரத்தின்போது மேற்கு டெல்லியின் சரஸ்வதி விஹாரில் இரண்டு சீக்கியர்களை உயிருடன் எரித்து கொன்ற வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் மீது, டெல்லி நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அவர் வன்முறை கூட்டத்தை வழிநடத்தினார். கும்பலைத் தூண்டிவிட்டு ஊக்கப்படுத்தினார். இதற்கு நீதிமன்றத்தில் போதுமான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய இவ்வழக்கு வரும் டிசம்பர் 16 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.