தேசத்தின் தென்கோடியில் பாவை இயக்கத்தால் புரட்சிகர மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எண்பதுகளின் தொடக்கத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடற்கரை கிறிஸ்தவ மீனவர்களால் மிகப்பெரிய கலவரம் உருவானது. அந்த கலவரத்தால் ஹிந்து பக்தர்கள் பலர் மீனவர்களால் கடலுக்குள் மீன் பிடிவலைகளை வீசிஇழுத்து செல்லப்பட்டும் போலீஸ் துப்பாக்கி சூட்டினாலும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பக்கத்து மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஹிந்துக்களும் வெகுண்டு எழுந்தனர் தங்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களின் உறவுகளை கிறிஸ்தவனாக மதம் மாற்றியதோடு நில்லாமல் கடற்கரையோர மீனவர்கள் செய்த தவறை தட்டிகேட்காமல் மத ரீதியாக ஓன்று பட்ட அனைத்து ஜாதி கிறிஸ்தவர்களால் தங்களின் எதிகாலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதனை கண்டு ஹிந்து சமுதாயம் விழிப்படைந்தது.

அதன் விளைவாக தங்களது பிள்ளைகளுக்கு மதம் குறித்த புரிதல் இல்லாததே மதம் மாறிப் போக காரணம் என்பதனை அறிந்து தங்களின் குழந்தைகளுக்கு மத ரீதியான அறிமுகத்தை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை மதுரானந்த சுவாமி தலைமையிலான ஹிந்து தர்மவித்யா பீடம் குழந்தைகளுக்காக சமய வகுப்பு ஆரம்பித்து  ஹிந்து தர்மத்தை பற்றிய பல பாடங்களை பிள்ளைகள் அனுபவ ஈதியாக கற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டது.

இந்த வகுப்புகள் ஊரிலுள்ள எதாவது ஒரு பெரிய கோயிலில் வைத்து கற்று தரப்பட்டது ஊரில் உள்ள பெரியவரோ அல்லது அங்குள்ள எதாவது கல்லுரி மாணவரோ இதன் ஆசிரியராக பொறுப்பேற்றார்கள். ஒரு ஊரில் நடைபெறுகின்ற சமய வகுப்புகளை பார்த்து அடுத்தடுத்த ஊர்களிலும் இது மாதிரியான சமய வகுப்புகள் ஏராளமாக தொடங்கப்பட்டன. பெரியவர்கள், தாய்மார்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல ஊர்களில் பஜனை குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது

இந்த கல்வியின் காரணமாக சிறுவர்களின் மத்தியில் ஹிந்து மதம் குறித்த புரிதல் ஏற்பட்டது. இதனால் ஞாயிற்று கிழமைகளில் கிறிஸ்தவர்கள் ஊர் ஊராக ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகளில் ஸுவிசேஷம் என்ற பெயரில் நடத்திய  அட்டூழியங்களையெல்லாம்  இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த சிறுவர்கள் தங்களின் மதம் குறித்த புரிதல் கிடைத்த பின்னர் ஆற்றிய எதிர்வினைகளால் இந்த அனாவசிய சுவிசேஷ கூத்து  முடிவுக்கு வந்தது .

இப்படி விழிப்புள்ள சிறுவர்களை நல்ல முறையில் பண்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பே பின்னாளில் பாவை நோன்பின் மகத்துவத்தை உணர்ந்து பஜனை குழுக்களாக உருவெடுத்தது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒரு அம்மன் கோயில், நாராயண சுவாமி கோயில், சிவன் கோயில் என்று ஏதாவது ஒரு இடத்தில் வைத்து பாவை வழிபாட்டு பஜனை தொடங்கியது. கிராமத்தில் உள்ள அனைத்து சிறுவர் சிறுமிகளும் இதில் கலந்து கொண்டனர். பின்னாளில் காஞ்சி மகாபெரியவரின் இந்து சமய மன்றத்தின் உதவியோடு விசுவ ரூபம் எடுத்தது.

காயாமொழியைச் சேர்ந்த தியாகி ஆறுமுகப் பாண்டியன் தலைமையிலான முப்புடாரி அம்மன் கோயில் பஜனைக் குழுவினர், கோபாலாச்சாரி அருணாச்சலம், சிவனணைந்த பெருமாள், ராமலிங்கபுரம் நடேசன் ஆகியோர் இணைந்து 1972ம் ஆண்டு இந்நிகழ்வைத் தொடங்கினர். தொடக்கத்தில் இந்நிகழ்ச்சி காயாமொழி பஜனைக் குழுக்களின் சந்திப்பாக தொடங்கிய நிகழ்ச்சி வெறுமென பொழுதுபோக்காக இருக்காமல் பக்தியும் இணைந்து இருக்க வசதியாக பெருக்கெடுக்கும் கனையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட மேலப்புதுக்குடி அருஞ்சுனைகாத்த ஐய்யனார் கோவிலே இவர்களது கூடுமிடமாக இறையருளால் அமைந்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பஜனை குழுக்களின் சங்கமமாக உருவெடுத்தது. இந்தப் பகுதியில் கிறிஸ்தவ மதமாற்றத்தின் விளைவாக அவர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளிலும் கிறிஸ்தவ திணிப்பு காரணமாக வெகுண்ட ஹிந்துக்கள் ஆங்காங்கே தனியாக ஹிந்து பள்ளிகளைத் துவங்கினர். இந்தப் பள்ளிளும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சேர்வதற்கு வாய்ப்பாக இருந்தது.

1984ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சொற்பொழிவு ஆற்றிய நூற்றா ண்டு தினம் கொண்டாடப்பட்டது. அதனை மத்திய அரசு இளைஞர் ஆண்டாக அறிவித்ததை தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தையும் சேர்த்து கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது. இதன்மூலம் பள்ளிக்கல்லூரிகளை தொடர்பு கொள்வதற்காக திட்டமிடப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆறுமுகம் ஐ.ஏ.எஸ். அவர்களின் உத்தரவுக்கிணங்க பள்ளிக்கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த ஐயனார் கோயிலில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் ஒன்றிணைந்து பாவை பாடல்களை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, வினாடிவினா, கதை சொல்லுதல், ஓவியபோட்டி என பல்வேறு போட்டிகள் ஒருபக்கம் என்றால், அருகிலேயே வற்றாத நீருற்று உள்ள சுனை இருந்ததால் உற்சாக குளியல்! தொடர்ந்து மதியம் கோயிலில் வழிபாடு; மதிய உணவுக்கு பின்னர்  மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு என்று இந்த நிகழ்சி நடந்து வந்தது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் சம்பாக் பிரச்சாரக் மறைந்த பாஸ்கர் ராவ் ஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் மாவட்ட
ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வந்தனர். இதன் மூலம் நிகழ்ச்சி மாவட்டம் முழுமைக்குமான திட்டமிடலுடன் நடந்தேறியது.

பணிக்க நாடார் குடியிருப்பைச் சார்ந்த திரு. வேல்நாடார், கயாமொழியைச் சார்ந்த எஸ்.எஸ். ஆதித்தன், நாதன் கிணறு தியாகி ஆறுமுக பாண்டியன் ஆகியோர் கமிட்டியின் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். பின்னர் இதற்கென மாவட்ட திருவெம்பாவை திருப்பாவை கமிட்டி ஆரம்பிக்கப்பட்டு ஆர். எஸ். எஸ் தொண்டர்களின் உதவியோடு மாவட்ட அளவிலான பள்ளி கல்லுரிகளின் மாணவர்கள் பங்கேற்போடு தொடர்ந்து 49 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பை முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ். எஸ் ஆதித்தன், ராஜ மாதங்கன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட குழுவினரும் தற்போது வி.பி. ஆறுமுகம், அங்குராஜ், பிரேமா, ஹெட்கேவார் ஆதித்தன் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் நடத்தி வருகிறார்கள்.

நமது சமயம் பற்றிய புரிதல் இன்மையால் மதம் மாறுவது நின்றுபோனது; கிறிஸ்தவகளின் அடாவடி சுவிசேஷ பிரசாரமும் தடைபட்டது. இந்த சமுதாய மாற்றத்தின் மூலகாரணமாக விளங்கியது, மார்கழி மாதத்தில் பாடப்படும் பாவை பாடல்கள்தான் என்றால் மிகையல்ல.