2020ம் ஆண்டில், தீபாவளியைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள ஹிந்து சமூகம், அதனை ‘சேவா தீபாவளி’ என விஷேஷமாக கொண்டாடினர். இதன் மூலம் அவர்கள், அந்நாட்டின் 26 மாகாணங்களில் உள்ள 225 நகரங்களில் வாழும் தேவைபடும் மக்களுக்கு 293,000 பவுண்டுகள் மதிப்புள்ள உணவு பொருட்கள், துணிமணிகளை சேகரித்து நன்கொடையாக வழங்கினர். இந்த நல்ல முயற்சியில், ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சங்கம், அமெரிக்கன் ஹிந்து அசோசியேஷன் கோயில், மேடிசன் கன்னட கூட்டா, சிலிக்கான் ஆந்திரா, சேவா இன்டர்நேஷனல், டெக்னோவிஸ், தி ஆர்ட் ஆஃப் லிவிங் மற்றும் தி ப்ரோ பொட்டிக் ஆகிய அமைப்புகளை சேர்ந்த ஹிந்துக்கள் இணைந்து செயல்பட்டனர்.