விஷ்வ இந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் வெளியிட்டுள்ள அறிகையில், ‘ஆப்கனில் போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தொண்டர்கள் உதவத் தயாராக உள்ளனர். அங்குள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள் இடம்பெயர்வது இயல்பானது. ஏனெனில் அவர்கள் ஆப்கனில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். தலிபான்கள் அட்சியில் அங்கு சிறுபான்மையினர் வாழ்வது சாத்தியமில்லை. ஆனால் அந்த நாட்டின் முஸ்லிம்கள் நமது மண்ணிற்கு குடிபெயர்வதை நான் எதிர்க்கிறேன். வங்க தேசம், மியான்மரில் இருந்து தஞ்சம் கேட்டு பாரதம் வந்த ரோஹிங்கியாக்களைப் போன்றோர், இப்போது இங்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல மீண்டும் நடந்துவிடக்கூடாது. எனவே,ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லிம்கள் வரக்கூடாது. அவர்களை ஏற்க எந்த முஸ்லிம் நாடுகளும்கூட தயாராக இல்லை. ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் ஹிந்துக்கள், சீக்கியர்களை சித்திரவதை செய்யவில்லை. ஆனால், அவர்கள் மீது கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, முஸ்லீம்கள் அங்கு மௌன சாட்சிகளாகவும் பார்வையாளர்களாகவும் கைதட்டுபவர்களாகவும்தான் இருந்தனர். எனவே, ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைக்கு அவர்களுக்கும் சமமான பங்கு உண்டு’ என கூறியுள்ளார்.