பாகிஸ்தானில் டி.டி.பி எனப்படும் தெரிக் இ தலிபான் எனும் பாகிஸ்தான் தலிபான் அமைப்பு இயங்கி வருகிறது. ஆப்கான் தலிபான்கள் வேறு பாகிஸ்தானின் இந்த தலிபான்கள் வேறு. இவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவ்வப்போது செயல்படுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சீனர்களுக்கு எதிராக அவ்வப்போது இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சீனர்கள் மீதான தற்கொலைப் படை தாக்குலையும் நடத்தியவர்கள் இவர்கள்தான். இதனால், அவர்களை பாரதத்தின் ‘ரா’ உளவு அமைப்புதான் வழி நடத்துகிறது என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. இந்நிலையில் தெரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் முப்தி நூர் வாலி மசூத், பலுசிஸ்தான் பஷ்துனிஸ்தான் சிந்துதேஷ் ஆகிய மாகாணங்களுக்கு பாகிஸ்தான் அரசு சுதந்திரம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் இனி நாங்கள் பாகிஸ்தான் ராணுவத்தையும் தாக்குவோம் என அறிவித்துள்ளார்.