கொரோனோவை காரணம் காட்டி ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை ரத்து செய்து வருகிறது தமிழக அரசு. இதனால், மாதக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வரிசையில், இந்த மாதமும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு. கொரோனா வெகுவாக குறைந்துள்ள சூழலில், அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் பயணம் செய்கின்றனர். அரசியல்வாதிகள் நடத்தும் விழாக்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது இல்லை, டாஸ்மாக் கூட்டம் குறித்துக் கேட்கவேத் தேவையில்லை. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தி.மு.க அரசு, கிரிவலத்தை மட்டும் திட்டமிட்டே தடுக்கிறது. இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. கேளிக்கைக்கும் குடிக்கும் தாராளமாக அனுமதி அளிக்கும் தமிழக அரசு, கட்டுப்பாடுகளுடன் கிரிவலத்தை அனுமதிக்காதது ஏன் என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.