மணிப்பூர் கவர்னராகிறார் இல.கணேசன்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து, பின்னர் அந்த அமைப்பிலேயே முழுநேர ஊழியராக வந்தவர் இல. கணேசன். ஆர்.எஸ்.எஸ்சில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பா.ஜ.கவில் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய செயலாளர், துணைத்தலைவர், தமிழக பா.ஜ.க தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் என, பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பல ஆண்டுகள் தேசப்பணியாற்றிய மூத்தத் தலைவர் இல. கணேசன். அவரை தற்போது மணிப்பூர் கவர்னராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு விஜயபாரதம் சார்பாக வாழ்த்துகள்.