கோவில்களுக்கு ஒலிப்பெருக்கி

குஜராத்தின் வடோதாராவில் உள்ள 108 கோவில்களில் ஹனுமான் சாலிசா, பக்தி பாடல்களை தினமும் இரண்டு முறைகள் ஒலிபரப்ப வசதியாக ஒலிபெருக்கியை வழங்கி வருகிறது ‘மிஷன் ராம் சேது’ என்ற ஒரு உள்ளூர் அமைப்பு. இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்த அமைப்பின் நிர்வாகிகள், வடோதரா நகர தலைவர் டாக்டர் விஜய் ஷா, நகர பொது செயலாளர், பா.ஜ.க தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ‘கொரோனா காலத்தில் கோவில்களுக்கு மக்கள் வர சற்று கடினமாக இருப்பதால், அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஹனுமன் சாலிசா, ஆரத்தி, பிற பக்தி பாடல்களை கேட்டு பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக, இதற்கு பதிவு செய்துகொண்ட 78 கோவில்களுக்கு ஒலிப்பெருக்கிகள் வழங்கப்படுகின்றன’ என மிஷன் ராம் சேது தலைவர் தீப் அகர்வால் தெரிவித்தார்.