முஸ்லிம்களின் வக்ஃப் வாரிய சொத்துகளை கணினி மயமாக்குதல், அவற்றை பாதுகாக்க காம்பௌண்ட் சுவர் அமைத்தல், காவலர்களை நியமித்தல், முஸ்லிம் மதத் தலைவர்களான இமாம்கள், மியூசின்கள், கிறிஸ்தவ போதகர்களுக்கு உரிய கௌரவம், உதவித் தொகை உள்ளிட்டவற்றை சரியான நேரத்தில் வழங்குவதற்கு ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது அங்கு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஜி.வி.எல் நரசிம்ம ராவ், ‘வக்ஃப் வாரிய நிலங்களை காம்பவுண்ட் சுவர்களை அமைத்து பாதுகாக்க உத்தரவிட்டுள்ள ஜெகன் மோக ரெட்டி, அதனை ஹிந்துக்களின் கோயில்களுக்கு நடைமுறைப்படுத்தமாட்டாரா? ” என கேட்டுள்ளார்.