விமான போக்குவரத்து இழப்பு

கொரோனா பரவலால் கடந்தாண்டு மார்ச் முதல் விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியது. மத்திய அரசின், ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு பயணியர் விமானங்கள் மட்டும் இயங்கின. கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது 85 சதவீதம் பயணியர் விமான போக்குவரத்து வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்து துறை வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ளது. நம் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் 2020 – 21ம் நிதியாண்டில் 19 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன. விமான நிலையங்களுக்கு 3,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பல நாடுகளில் பயண தடை விலக்கி கொள்ளப்படுவது போன்றவற்றால் விமான சேவைகள் சீரடையத் துவங்கி உள்ளன. எனவே, அடுத்து வரும் ஆண்டுகளில் வளர்ச்சி இரட்டிப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.