சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனிகாவின்கூட்டுத் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கும் இன்னும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இந்த தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட பாரத தேசத்தவர்கள் வெளிநாடுகளில் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை. கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்கான நிதி உதவியை வழங்க சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதர் பூனவல்லா முன்வந்துள்ளார். இதற்காக அவர் ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளார். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கான செலவுகளுக்கு நிதி உதவி பெற இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.