ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனீப் ஆத்மர், பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ‘ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க ஐ.நா சபையின் அவசரகால பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும். தலிபான் வன்முறை காரணமாக ஆப்கானிஸ்தானில் நிகழும் துயரத்தை நிறுத்த ஐ.நா சபையும் சர்வதேச சமூகமும் முக்கிய பங்காற்ற வேண்டும். தற்போதைய ஐ.நா சபையின் தலைவராக உள்ள பாரதம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்கன் மக்கள் மீது தலிபான்களின் கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர். இது பல்லாயிரம் பொதுமக்களின் மரணத்திற்கும் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு (பாகிஸ்தான்) பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து தலிபான்கள் நடத்தும் தாக்குதல்கள் பேரழிவை உண்டாக்கும். அவர்கள் போர் விதிகளை மீறுகின்றனர். சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்படுகிறது’ என கூறினார்.