மஹாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார். அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக அனில் தேஷ்முக் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். மேலும், இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே, தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத்துறையினர் தற்போது கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. அடுத்ததாக, அனில் தேஷ்முக்கையும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.+