டாய்கதோன்-2021 மாநாட்டில் பங்கேற்றவர்களுடன், வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசிய பிரதமர் மோடி, ‘பாரதத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகளில் 80 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. இதனால், கோடிக்கணக்கான நம் நாட்டுப் பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது. இந்த சூழலை மாற்ற வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சர்வதேச பொம்மை சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்கள். அதில், நம் பாரதத்தின் பங்களிப்பு 1.5 பில்லியன் டாலர் மட்டுமே. குழந்தைகளின் முதல் பள்ளி குடும்பம்தான். அவர்களது முதல் புத்தகம், முதல் நண்பன் எல்லாம் பொம்மைகள்தான்’ என கூறினார்.