டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறையின் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா,’கொரோனாவால் உயிரிழந்த, 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீது, 12 முதல், 24 மணி நேர இடைவெளியில் பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், தொற்று இல்லை என்றே முடிவுகள் வந்துள்ளன. உயிரிழந்தவர்களின் மூக்கு, வாய்ப் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு பின் கொரோனா வைரஸ்கள் செயலிழந்து விடுகின்றன.எனவே, அந்த உடல்களில் இருந்து தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவு.எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த உடல்களின் மூக்கு, வாய்ப் பகுதிகளை நன்றாக அடைத்துவிடவேண்டும்.கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்ட பின், எலும்புகள், சாம்பல் வாயிலாக தொற்று பரவாது.அவற்றை சேகரிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று கூறியுள்ளார்.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மருத்துவர் சுதிர் குப்தாவின் கருத்து வலு சேர்த்துள்ளது.