பதினெட்டு வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கோவின், ஆரோக்கியசேது வலைதளங்களில், கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படுகிறது. தடுப்பூசிக்காக பதிவு செய்த சிலர், குறிப்பிட்ட நாளில் மருத்துவமனைக்கு செல்லாத போதிலும், தடுப்பூசி போட்டு விட்டதாக, அலைபேசியில் குறுந்தகவல் வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். தகவல்களை கணினியில் பதிவு செய்யும் ஊழியர்களின் கவனக்குறைவால், இந்த குளறுபடி நிகழ்வதால், இதை தடுக்க, தடுப்பூசிக்காக பதிவு செய்வோருக்கு, நான்கு இலக்க ரகசிய எண் கொடுக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் கேட்கும்போது, இந்த ரகசிய எண்ணை தெரிவித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பிறகு தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்த குறுந்தகவல் அவர்களுக்கு அனுப்பப்படும். இதனால் இனி இத்தகைய குளறுபடிகள் நிகழ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.