பரதன் பதில்கள்: திருவள்ளுவர் என்ன ஜாதி?

சிலருக்கு  மட்டுமே  ‘நல்வாழ்வு’  கிடைப்பது  ஏன்?

– சி. ராஜேந்திரன், தண்டையார்பேட்டை

முற்பிறவியில் தான தர்மம் செய்தவர்களுக்கு இந்தப் பிறவியில் நல்வாழ்வு அமைகிறது” என்கிறார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணன். உஷார்… அடுத்த பிறவியில் கஷ்டப்படாமல் இருப்பதற்கு இந்தப் பிறவியில் தான தர்மங்களைச் செய்யுங்கள்.

 

ஐடி  துறையில்  உள்ள  எனக்கு  தங்களின்  அறிவுரை  என்ன?

– சுகன்யா ஸ்ரீராம், ஓமலூர்

 

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்.

 

* திருவள்ளுவர்  என்ன  ஜாதி?

– ஜி. பூவரசன், உடுமலைப்பேட்டை

 

நல்ல வேளை, அது தெரியாமல் போச்சு. இல்லையென்றால் அம்பேத்கர், வ.உ.சி போன்ற தேசிய தலைவர்களை ஜாதி வட்டத்துக்குள் அடைத்தது போன்று வள்ளுவரையும் ஒரு ஜாதி தலைவராக்கி இருப்பார்கள்.

 

* திராவிடர்  கழகத்தில்  முஸ்லிம்கிறிஸ்தவர்கள்  இருக்கிறார்களா?

– எஸ். சுதர்சன், தென்காசி

 

கோவையில் ஒரு அப்பாவி முஸ்லிம் (பாரூக்) திகவில் சேர்ந்து ‘அல்லா இல்லை’ என்று பேசினான். ‘நீயே இல்லடா’ என்று அவனை வெட்டிக் கொன்றே போட்டார்கள். இதற்கு மேலும் முஸ்லிம்களுக்கு திகவில் சேர தைரியம் இருக்குமா?

 

எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் நடந்த  ரெய்டு  பற்றி?

– கி. ரகுராமன், காட்டுமன்னார்கோவில்

 

அந்த அம்மாவை பட்டுப்புடவை கீதாலட்சுமி என்று அழைப்பார்களாம். அவரிடம் எந்த வேலைக்காக யார் சென்றாலும் ஒரு பட்டுப்புடவையோடுதான் செல்ல வேண்டுமாம். ஊழல்… ஊழல்.. எங்கெங்கும் ஊழல்… கழகங்களின் கைங்கர்யம் இதுதான்.

 

திமுக  ஏப்ரல்  25ம்  தேதி  நடத்திய  பந்த்  பற்றி?

– என். வசந்தகுமாரி, கும்மிடிப்பூண்டி

 

அடுத்து வருகின்ற தேர்தலுக்கு கூட்டணிக்கு அச்சாரம் போட்டாச்சு. வியாபாரிகளை கடைகளை அடைக்கச் சொன்னவர்கள் தங்களது சன் டிவி, கலைஞர் டிவி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புக்கும் ‘பந்த்’ அறிவித்திருக்கலாமே! இளிச்சவாயன் ஏமாந்த நம்மூர் வியாபாரி மட்டுமே.

 

சமீபத்தில் தந்தி, புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில்சாமானியர்’  என்ற  பெயரில்  ஒருவர்  கலந்துகொள்வது  பற்றி?

– கே. செல்வராஜ், காரைக்குடி

 

இடதுசாரிகளின் மற்றொரு பெயர்தான் ‘சாமானியர்’. எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற முகமூடிகளில் கலந்து கொள்கிறவர்களும் இடதுசாரிகளே!

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.